Hidden Love

நட்பின் மீது காதல்

📅 15 Jul 2026 ⏳ 4 நிமிட வாசிப்பு ❤️ 3 விருப்பங்கள்

உன்னுடன் பேசாத ஒரு நாளும்,
முழுமையற்ற நாளாய் தோன்றியது...
உன் அக்கறை,
உன் சின்ன சின்ன கோபம்,
உன் சிரிப்பு...
நீ சிரித்தால் காரணமில்லாமல்
நானும் சிரிக்கிறேன்...🩵
நீ சோகமாக இருந்தால்
என் மனமும் அமைதியை இழக்கிறது...
உன் சிரிப்பில் தோழமையை கண்டேன்,
உன் அக்கறையில் காதலை உணர்ந்தேன்✨
நண்பன் என்று அழைக்கும்
ஒவ்வொரு முறையும் சிரிக்கிறேன்...😊
ஒரு நாள் பேசவில்லை என்றால்
ஏதோ ஒன்றை இழந்ததுபோல் தோன்றுகிறது...
நட்பை இழக்க மனமில்லை...
ஆனால் உன்னை காதலிக்காமல் இருக்கவும் முடியவில்லை😌
நட்பை விட பெரிய காதல் இல்லை...
காதலாக மாறிய நட்பை விட அழகான உணர்வும் இல்லை❤️
அதனால்...
என் காதல்
உன் நட்பின் எல்லையைத் தாண்டாமல்,
அமைதியாக
உன்னை.....
நேசித்துக்கொண்டே இருக்கும்...😊🙃